மார்டின் சாரிட்டபிள் டிரஸ்ட் ரோட்டரி இன்டர்நேஷனல் ஒப்பந்தம்
புதுச்சேரி :மார்டின் குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் தலைமையில் செயல்படும் மார்டின் சாரிட்டபிள் டிரஸ்ட், உலகின் முன்னணி சமூக சேவை அமைப்பான ரோட்டரி இன்டர்நேஷனல் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஒப்பந்தத்தை வழங்கினர். நிகழ்ச்சியில், ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர் பிரான்சிஸ்கோ அரெஸ்ஸோ, ரோட்டேரியன் சுனில், சக்காரியா, ரமேஷ், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்த மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுதும் மியாவாக்கி காடு திட்டம் விரிவாக்கப்பட உள்ளது. இதன் நோக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், சமூக நலனையும் வலுப்படுத்துவதாகும். மார்டின் குழுமம் மேட்டுப்பாளையத்தில் 7,000 சதுர அடி பரப்பில் 1,500 சொந்த நாட்டுச் செடிகளுடன் மியாவாக்கி காடு உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.