தியாகி அன்சாரி துரைசாமி நினைவு நாள்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் தியாகி அன்சாரி துரைசாமி நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதனையொட்டி, மகாத்மா காந்தி வீதி - சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.துணை சபாநாயகர் ராஜவேலு, பாஸ்கர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.