உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மாவளி சுற்றுதல் நிகழ்ச்சி

 கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மாவளி சுற்றுதல் நிகழ்ச்சி

புதுச்சேரி: பாண்டி மெரினா கடற்கரை, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், புதுச்சேரியில் முதல் முறையாக 'மாவளித் திருவிழா' நேற்று நடந்தது. பாண்டி மெரினா மக்கள் மேடை அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், பனைமரத்தின் பயன்பாடு, கார்த்திகை தீபம் பண்டிகை வரலாறு, மாவளி சுற்றும் நோக்கம் மற்றும் சுற்றும் முறை குறித்த சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து, தனியார் நடனப்பள்ளி மாணவர்களின் மேடை நடனம், வீர ஆஞ்சநேயர் தற்காப்புக் கலை குழுவினரின் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது. பின், முக்கிய நிகழ்வாக பனை பொருட்களால் உருவாக்கப்பட்ட 'மாவளி' சுற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாவளி சுற்றினர். இதனை திரளான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் வேந்தன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி