மேலும் செய்திகள்
கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி பலி
14-Mar-2025
திருபுவனை; திருபுவனை அருகே மின்சாரம் தாக்கி கட்டட மேஸ்திரி இறந்தார்.புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சதீஷ், 35; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி சிலம்பரசி. இரண்டு மகள்கள் உள்ளனர்.திருபுவனை அடுத்த பி.எஸ்.பாளையம் - குமளம் சாலை அருகே நேற்று காலை 6:30 மணிக்கு கட்டட பணிக்காக மெஷின் மூலம் இரும்புக் கம்பிகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மிஷினில் இருந்து மின்சாரம் தாக்கி சதீஷ் துாக்கி வீசப்பட்டார். உடன் அவரை மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தார்.அவரது மனைவி சிலம்பரசி புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
14-Mar-2025