உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

புதுச்சேரி: உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி எம்.வி.ஆர். மருத்துவ மையம், லயன்ஸ் கிளப் சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் வில்லியனுார் புனித லுார்து மாதா ஆலய வளாகத்தில் நடந்தது.முகாமில், எம்.வி.ஆர். மருத்துவ மைய குழுவினர், பொது மக்களுக்கு இலவச பொது மருத்துவம், ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு, இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கினர். முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை