உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாந்திகிரி மருத்துவமனையில் நாளை மருத்துவ முகாம்

சாந்திகிரி மருத்துவமனையில் நாளை மருத்துவ முகாம்

புதுச்சேரி : புதுச்சேரி, சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில் நாளை 29ம் தேதி மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளை, எஸ்.வி., பட்டேல் சாலை பழைய சாராய ஆலை அருகில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் நாளை 29ம் தேதி மருத்துவ ஆலோசனை முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. முகாமில் கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி, ஆர்த்தரைடிஸ், ஸ்பான்டிலேசிஸ், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கேரளா பாரம்பரிய முறைப்படி ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.கேரளாவில் புகழ்பெற்ற டாக்டர் கோபாலகிருஷ்ணன், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கண்ணன் சிகிச்சை அளிக்கின்றனர். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன் பெற 0413 - 2225898, 9585535898 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை