குளூனி மருத்துவமனையில் மருத்துவ கல்வி கருத்தரங்கு
புதுச்சேரி: புதுச்சேரி குளூனி மருத்துவமனையில் 161வது தொடர் மருத்துவக்கல்வி கருத்தரங்கு நடந்தது.மருத்துவமனையின் திட்ட இயக்குனர் ரங்கநாத் வரவேற்றார்.கருத்தரங்கில், டாக்டர் லியோ குணாளன் சிறப்புரையாற்றுகையில், இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு எவ்வாறு 28 வயதிலேயே இருதயம், சிறுசீரகம் மற்றும் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உடல் செயல்பாட்டை சீரமைத்து முழுமையான உடல், மன நலத்தோடு எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்துவிளக்கம் அளித்தார்.புதுச்சேரி - கடலுார் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட், டாக்டர் நளினி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.கருத்தரங்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளை சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள், மருத்துவம் பயிலும் மாணவர்கள், குளூனி மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.