உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு

அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். சென்னை கிளீனிக்கல் மருத்துவமனையின் நரம்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் பானிகிரன் பேசுகையில், 'நரம்பு மற்றும் முதுகு தண்டுவடத்தில் காசநோய், கட்டிகள், விபத்தில் ஏற்படும் காயங்களால் உண்டாகும் பாதிப்புகளை பெரிய அறுவை சிகிச்சை செய்யாமல், எண்டோஸ்கோபிக் மூலமாக சிறிய நுண்துளை மூலம் அறுவை சிகிச்சை செய்யலாம். இதனால் பெரிய அளவில் ரத்த சேதம், தையல்களால் ஏற்படும் தழும்புகள், பெரிய அளவிலான வலி ஆகியவை இல்லாமல் இருக்கும். இந்த அறுவை சிகிச்சை முறையினால் நோயாளி விரைவில் குணமடைந்து சராசரி வாழ்க்கைக்கு விரைவில் திரும்பலாம். நோயாளியின் மருத் துவத்திற்கு பெரிய நிதிசு மையும் ஏற்படாது' என்றார். கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி குணேஸ்வரி, குறைதீர் அதிகாரி ரவி மற்றும் டாக்டர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ