உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ கருத்தரங்கம்

மருத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரி: இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை சார்பில், தொடர் மருத்துவ கருத்தரங்கில் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை மற்றும் சென்னை எம்.ஜி.எம்., கேன்சர் இன்ஸ்டிடியூட் இணைந்து தொடர் மருத்துவ கருத்தரங்கம், புதுச்சேரி ஆனந்தா இன் ேஹாட்டலில் நடந்தது. இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி கிளை, தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். பொது செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் சிவக்குமார், சிறப்பு மருத்துவர்கள், ஜெகதீஷ், லோகேஸ்வரன் உட்பட மருத்துவர்கள் கலந்து கொண்டு, புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ தொடர்பான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங் கினர். தொடர்ந்து, மருத்துவர்களுக்கு விருது வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !