உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தோ திபெத் எல்லை காவல் படை முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு

இந்தோ திபெத் எல்லை காவல் படை முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு பாரத் தர்ஷன் சுற்றுலா வந்துள்ள இந்தோ திபெத் எல்லைகாவல் படை குழுவினர், முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினர்.மத்திய அரசின், உள்துறை அமைச்சகத்தின் குடிமை நடவடிக்கை திட்டத்தின் கீழ், இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை ஏற்பாட்டில், லடாக் யூனியன் பிரதேச, லே மாவட்டம், நியோமா கிராம அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 2 ஆசிரியர்கள், 26 மாணவர்கள் மற்றும் 2 இந்தோ திபெத் எல்லை காவல் படை பிரதிநிதிகள், 'பாரத் தர்ஷன்' சுற்றுலாப் பயணமாக புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ளனர்.இக்குழுவினர், இந்தோ திபெத் எல்லை காவல் படையின் சரவணன் தலைமையில் முதல்வர் ரங்கசாமியைசட்டசபை வளாகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.அப்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முதல்வர் இனிப்பு மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிவாழ்த்தினார்.புதுச்சேரியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் இக்குழுவினர், முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பார்வையிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி