உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனநல பாதுகாப்பு பயிற்சி பட்டறை 

மனநல பாதுகாப்பு பயிற்சி பட்டறை 

புதுச்சேரி : தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உளவியல் துறையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, பெண்கள் அதிகாராமளிப்பு புதுச்சேரி ஹப் ( மிஷன் சக்தி துணை திட்டம்) சார்பில், இளமை பருவத்தில் மனநல ஆதரிப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.உளவியல் துறை உதவி பேராசிரியர் ரோசாலிண்ட் பிரபா வரவேற்று, இளம் பருவத்தினருக்கான மனநல ஆலோசனையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். கல்லுாரி முதல்வர் சசிகாந்ததாஸ், அர்த்தமுள்ள வாழ்க்கையே மன ஆரோக்கியத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.உளவியல்துறை தலைவர் ராமபிரபு, இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் தினசரி சவால்களின் அழுத்தம், டிஜிட்டல் தாக்கம், கல்வி அழுத்தங்கள் குறித்து பேசினார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை உதவி இயக்குநர் சாலமன் சவரிராஜா, இளம்பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உரையாற்றினார். இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மனநலத்துறை தலைவர் டாக்டர் மதன், இளமை பருவத்தில் மன நலம் பாதுகாத்தல் என்ற தலைப்பில் பேசினார்.வழக்கறிஞர் ரவி சட்ட கல்வி அறிவு, போக்சோ சட்டம், வரதட்சணை தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.பாரத மாதா ஒருங்கிணைந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையத்தின் திட்ட இயக்குநர் சிவானந்தம், போதை பொருள் பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து பேசினார். மிஷன் சக்தி திட்டத்தின் பாலின நிபுணர் கமல்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ