உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பால் சொசைட்டி ஊழியர் சாலை விபத்தில் பலி

பால் சொசைட்டி ஊழியர் சாலை விபத்தில் பலி

காரைக்கால் : காரைக்கால், கோட்டிச்சேரி, திருவேட்டக்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 34; பால் சொசைட்டியில் பணிபுரிந்தார்.இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடிந்து விட்டு தனது பைக்கில் வீட்டுக்கு செல்லுவதற்காக திருவேட்டக்குடி கடைவீதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். அரசு மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.விபத்து ஏற்படுத்திய திருவேட்டக்குடி, மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ், 26, என்பவர் காயம் அடைந்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ