மேலும் செய்திகள்
காரைக்கால் கிரைம் செய்திகள்
22-Oct-2026
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் மில் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். குறிஞ்சிப்பாடி, தச்சர் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ஜோதிபிரகாஷ்,35; இவரது மனைவி யோகலட்சுமி,31; திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் மகள் உள்ளார். குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலையில், வேர்க்கடலை உடைக்கும் மில் நடத்தி வரும் இவர், நேற்று மதியம் சாப்பிட வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த அவரது மனைவி, கணவரின் நண்பருக்கு தகவல் தெரிவித்தார். அவர் மில்லிக்கு சென்று பார்த்த போது, ஜோதிபிரகாஷ் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். தகவலின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Oct-2026