உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மீண்டும் மினிபஸ் சேவை; காங்., கோரிக்கை

 மீண்டும் மினிபஸ் சேவை; காங்., கோரிக்கை

புதுச்சேரி: கிருஷ்ணா நகருக்கு மீண்டும் மினி பஸ் சேவை துவக்க வேண்டும் என, காமராஜ் நகர் காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் மனு அளித்தார். காங்., ஒருங்கிணைப்பாளரும், காமராஜ் நகர் தொகுதி பொறுப்பாளருமான தேவதாஸ் தலைமையில் கிருஷ்ணா நகர் தொகுதி நிர்வாகிகள், பி.ஆர்.டி.சி., இயக்குநர் அமன் சர்மாவை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், கிருஷ்ணா நகருக்கு ஏற்கனவே பி.ஆர்.டி.சி., மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. மக்களுக்கு பயனளித்து வந்த இந்த சேவை, மூன்று மாதங்களுக்கு முன் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் கிருஷ்ணா நகர் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதனால், நிறுத்தப்பட்ட மினி பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட பி.ஆர்.டி.சி., இயக்குநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ