உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் சீரமைப்பு பணி அமைச்சர் துவக்கி வைப்பு

வாய்க்கால் சீரமைப்பு பணி அமைச்சர் துவக்கி வைப்பு

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.91 லட்சம் மதிப்பில் சாலை மற்றும் வாய்க்கால் சீரமைக்கும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.91 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில், திருக்கனுார் அப்துல் கலாம் நகர், அப்துல் ரஹீம் நகரில் குடிநீர் குழாய் மற்றும் சாலை அமைத்தல், பி.எஸ்.பாளையம் குரு சித்தானந்தா நகர் மற்றும் குமரன் நகரில் கருங்கல் சாலை அமைத்தல், மணலிப்பட்டு முருகன் கோவில் வீதியில் சாலை அமைத்தல், திருக்கனுார் கடை வீதியில் வடிக்கால் வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பா.ஜ., பிரமுகர் முத்தழகன், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், உதவியாளர்கள் சீனிவாசராம், மல்லிகார்ஜூனன், இளநிலை பொறியாளர்கள் தேவேந்திரன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை