பசு பாதுகாப்பு ரதயாத்திரை அமைச்சர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் இந்து பாதுகாப்பு படை சார்பில், நடந்த பசு பாதுகாப்பு ரத யாத்திரையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். பசு பாதுகாப்பு படை சார்பில், பசு பாதுகாப்பு ரத யாத்திரை புதுச்சேரியில் நடந்தது. ரத யாத்திரையை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ரதத்திற்கு சிறப்பு பூஜை செய்து யாத்திரையை துவக்கி வைத்தார். இதில் தேசிய தலைவர் கண்ணன், புதுச்சேரி மாநில தலைவர் நடராஜன், மாநில ஆன்மிக பிரிவு தலைவர் ஆறுமுகம், மாநில ஆன்மிக பிரிவு பொதுச்செயலாளர் காசி சிவராம சாமி, புதுச்சேரி மாநில செயலாளர் இளவரசன், மாநில விவசாய தலைவர் கந்தசாமி, மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் குமார், மாநில இளைஞரணி தலைவர் மதன், மாநில பொதுச் செயலாளர் அழகுராஜ், மாநில விவசாய அணி தலைவர் சந்திரசேகர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சுவாமிநாதன், மாநில இணை செயலாளர் சரவணன், திருநெல்வேலி மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், பவானி நகர் துணைத் தலைவர் கதிர்வேல், பவானி நகர செயலாளர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.