உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆழ்துளை கிணறு பணி அமைச்சர் துவக்கி வைப்பு

 ஆழ்துளை கிணறு பணி அமைச்சர் துவக்கி வைப்பு

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் தொகுதி, கரையாம்புத்துார் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது. இப்பணியினை அமைச்சர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி, கிராம குடிநீர் திட்ட இளநிலை பொறியாளர் சிவானந்தம், இளநிலை பொறியாளர் நிவேத்திகா, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவிப்பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை