உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலைகள் மேம்படுத்தும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு

சாலைகள் மேம்படுத்தும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் சாலைகள் மேம்படுத்தும் பணியினை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார்.ராஜ்பவன் தொகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுநிதியின் கீழ் ரூ. 64 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில், புத்து மாரியம்மன் கோவில் வீதி, பாப்பம்மாள் கோவில் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, அங்காளம்மன் நகர் பகுதிகளில் சாலை மேம்படுத்தும் பணிக்கான துவங்க விழா நேற்று நடந்தது.விழாவில், தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இதில்,புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, என்.ஆர்.காங்., நிர்வாகி ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை