உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விமான சேவை புதுச்சேரியில் இருந்து மீண்டும்... ஹெலிகாப்டர் சர்வீசும் துவங்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

விமான சேவை புதுச்சேரியில் இருந்து மீண்டும்... ஹெலிகாப்டர் சர்வீசும் துவங்க திட்டம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து விமான சேவை வரும் 27ம் தேதி முதல் ைஹதராபாத், பெங்களூருவுக்கு மீண்டும் துவங்க உள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2013 ஜனவரியில் திறக்கப்பட்டது.விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான சேவை செயல்பட துவங்கியது. இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து விமானங்களை பெங்களூரு, ஐதராபாத்துக்கு இயக்குவதை கடந்த மார்ச் 30ம் தேதியுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுத்தியது. கடந்த ஆறு மாதங்களாக விமானங்கள் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது:புதுச்சேரியில் வரும் 27ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சார்பில் விமான சேவை ைஹதராபாத், பெங்களூருக்கு மீண்டும் துவக்கப்பட உள்ளது. அடுத்ததாக ஏர்ஷபா நிறுவனம் சார்பில், கொச்சி, தூத்துக்குடி, திருப்பதி, சேலம், கோவை, ராஜ்முந்திரி ஆகிய பகுதிகளுக்கும் விமான சேவை விரிவாக்கம் செய்ய உள்ளது.தொடர்ந்து இந்நிறுவனம் அடுத்து ஹெலிகாப்டர் சேவையை துவங்க உள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தை பட்டானுார் அருகே 45 டிகிரி கோணத்தில் சிறிது மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான நிலத்தை எடுப்பது தொடர்பாக சுற்றுலா துறை அதிகாரிகள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தை கலந்து பேசியுள்ளனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !