மேலும் செய்திகள்
விளையாட்டு மைதானம் அமைச்சரிடம் கோரிக்கை
08-Oct-2024
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவு ரோந்தை தீவிரப்படுத்த போலீசாருக்கு, அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்னை தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் நேற்று போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் தீபாவளியொட்டி நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கூடுதல் போலீசார் நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வணிக நிறுவனங்களை மூடிவிட்டு நள்ளிரவில் வியாபாரிகள் வீடு திரும்புவர் அவர்களின் பாதுகாப்பிற்காக போலீசார், இரவு ரோந்தை தீவிரப்படுத்தி கண்காணிக்க அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.மேலும், ஊர்க்காவல் படையினருக்கு பதவி உயர்வு மற்றும் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஜி.பி., ஷாலினி சிங், உள்துறை சிறப்பு செயலர் கேசவன், சார்பு செயலர் இரன், டி.ஜ.ஜி.க்,கள் சத்தியசுந்தரம், விஜயேந்திர குமார் யாதவ், சீனியர் எஸ் பி.,க்கள் நார சைதான்யா, கலைவாணன், பிரவீன் குமார் திரிபாதி, போக்குவரத்து எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன் குமார், எஸ்.பி.,க்கள் ரங்கநாதன், சுபம்கோஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் ,சுரேஷ்பாபு, கணேஷ், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
08-Oct-2024