உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதியுதவி

கோவில் திருப்பணிக்கு அமைச்சர் நிதியுதவி

புதுச்சேரி: சுத்துக்கேணி மாரியம்மன் கோவில் திருப்பணிக்காக அமைச்சர் நமச்சிவாயம் ரூ. 2 லட்சம் நிதியை கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார். மண்ணாடிப்பட்டு தொகுதி, சுத்துக்கேணி பேட்டில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபி ேஷகத்திற்கான திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் நமச்சிவாயம், கோவில் திருப்பணியினை பார்வை யிட்டு, தனது சொந்த செலவில் முதல்கட்டமாக ரூ.1 லட்சம் நிதி வழங்கிய நிலையில், நேற்று 2ம் கட்டமாக ரூ.2 லட்சத்தை கோவில் நிர்வாகக் குழுவினரிடம் வழங்கினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், அ.தி.மு.க., நிர்வாகி பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ