உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டிட்வா பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

 டிட்வா பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் டிட்வா புயல், மழை பாதிப்பு குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருகிறது. புயல், மழை பாதிப்புகளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வம், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர். ராஜ்பவன் வைத்திக்குப்பம், குருசுகுப்பம் மீனவர் கிராமங்களில் ஆய்வு செய்த அமைச்சர் லட்சுமிநாராயணன், கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகளை கடல் சீற்றத்தினால் சேதமடையாமல் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு மீன்வளத் துறையினருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு விசைப் படகுகள் மாற்றப்பட்டன. அரியாங்குப்பம் வீராம்பட்டினத்தில் கடற்கரையோரம் மீனவ கிராம மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அங்கு கடல் அரிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஏரி, மதகுகள் கிருமாம்பாக்கம் ஏரி மற்றும் மதகுகள் ஏரியின் நிலை, அதன் கொள்ளளவு, நீரின் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கொம்பந்தன்மேடு பாகூர் பரிக்கல்பட்டு பகுதியில் உள்ள கொம்பந்தன்மேடு அணையை வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க மண் அரிப்பினை தடு க்க தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார். சித்தேரி அணை க்கட்டு பகுதியை ஆய்வு செய்தனர். ஊசுட்டேரி முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவசர தயார் நிலை அமல்படுத்தவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்