உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 1891 விவசாயிகளுக்கு ரூ.1.15 கோடி மானியம்  அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

1891 விவசாயிகளுக்கு ரூ.1.15 கோடி மானியம்  அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

புதுச்சேரி: பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பயிர் உற்பத்தி ஊக்கத்தொகையாக, புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்த 1891 விவசாயிகளுக்கு 1.15 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட் டுள்ளது. இது குறித்து வேளாண் துறை அமைச்சர் தேனீஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நலத்துறையின் மூலம் வேளாண் மற்றும் விவசாயிகள் பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்கவும். விவசாயிகள் பயிர் சாகுபடியில் முதலீடு செய்யும் இடுபொருட்கள் மற்றும் பயிர் உற்பத்தி பண்ணை செலவினங்களை ஈடுகட்ட பயிர் உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஊக்கத்தொகையில், தீவனப்பயிர் சாகுபடி செய்யவும் பொதுப்பிரிவு விவசாயிகள் 34 பேருக்கு ரூ.2,30,480 ரூபாய்; பயறு வகைகள் சாகுபடி செய்யும் 1279 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ரூ.57,79,280 ரூபாய், மணிலா சாகுபடி செய்யும் 521 விவசாயிகளுக்கு ரூ.52,71,520, சிறுதானியம் மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் 16 விவசாயிகளுக்கு ரூ.1,03,490 ரூபாய் என மொத்தம் 1816 விவசாயிகளுக்கு ரூபாய். 1,11,46,290 மானியம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் பயறு வகைகள் மற்றும் மணிலா சாகுபடி செய்யும் அட்டவணை இன விவசாயிகள் 75 பேருக்கு ரூபாய் ரூ.3,55,000 மானியம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை