உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயிர் காப்பீடு நிவாரணம் வழங்கல் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

பயிர் காப்பீடு நிவாரணம் வழங்கல் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தகவல்

புதுச்சேரி: பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 3 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரத்து 583 ரூபாய், நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக் கு மார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரியில் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், விவசாயிகளின் பிரீமியத்தின் பங்கை, புதுச்சேரி அரசே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரபி 2023 மற்றும் காரீப் 2024 பருவங்களுக்கான இழப்பீட்டு தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் 2023ல், பெஞ்சல் புயலால் பாதித்த வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு, 4 லட்சத்து 22 ஆயிரத்து 675 ரூபாய், காரீப் 2024ல், வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு 13 லட்சத்து 95 ஆயிரத்து 565 ரூபாய், காரைக்காலில், காரீப் 2023ல் நெல் பயிர் செய்த விவசாயிகளுக்கு, 59 லட்சத்து 22 ஆயிரத்து 315 ரூபாய், காரீப் 2024 பருவத்தில் நெல் விவசாயிகளுக்கு, 86 லட்சத்து 86 ஆயிரத்து 123 ரூபாய், வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. ரபி 2023-24ல், உளுந்து பயிர் செய்த விவசாயிகளுக்கு, 10 லட்சத்து 42 ஆயிரத்து ஆறு ரூபாய் வழங்கப்படும். ஏனாமில், 2024ல் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு 21 லட்சத்து 2 ஆயிரத்து 138 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை பயிர் காப்பீட்டில் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் பதிவு செய்யப்பட்டனர். மத்திய அரசிடமிருந்து தேசிய காப்பீடு நிறுவனம் பெற வேண்டிய மத்திய அரசின் பங்கான நிதி ஒரு கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 190 ரூபாய் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நெல் மற்றும் வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இழப்பீட்டு தொகை, ஒரு கோடியே 19 லட்சத்து 90 ஆயிரத்து 761 ரூபாய், விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும். மொத்தம், 3 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரத்து 583 ரூபாய், 2431 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இ வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி