கடற்கரை கிராமங்களில் அமைச்சர் பார்வை
புதுச்சேரி : காலப்பட்டு கடற்கரை கிராமங்களில் அமைச்சர் லட்சுமிநாராயணன் கடல் சீற்றத்தை பார்வையிட்டார்.பெங்கல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமைச்சர் லட்சுமி நாராயணன், தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், ஆகியோர் காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கடற்கரை மீனவ கிராமங்களான பிள்ளைச்சாவடி, சின்னக்காலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு, கணபதி செட்டிக்குளம் பகுதிகளில் கடல் சீற்றத்தை பார்வையிட்டனர்.கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், மீன்வளத் துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மீனவர்களை பாதுகாப்பான பகுதிக்கும் செல்லுங்கள். படகுகளை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைக்க ஆகும் செலவை மீன்வளத் துறை ஏற்கும் என அமைச்சர் தெரிவித்தார்.