உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விடுபட்ட வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி

 விடுபட்ட வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி

புதுச்சேரி: வாக்காளர் திருத்த பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களின் ஆவணங்களை சரிபார்த்து ஓட்டுரிமையை உறுதி செய்யும் பணி புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது. ராஜ்பவன், முத்தியால்பேட்டை தொகுதிகளில் நடந்த வாக்காளர் திருத்த பட்டியலில், இடம் மாறுதல், இறந்தவர்கள் மற்றும் முகவரி இல்லாதவர்கள் 2002 ஓட்டுப்பதிவு ஆவணங்கள்படி, ராஜ்பவனில் 2,300 பேர் மற்றும் முத்தியால்பேட்டை தொகுதியில் 1,900 பேர் என, மொத்தம் 4,200 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை அவர்கள் சமர்ப்பித்த தகுந்த ஆவணங்களை சரிபார்த்து ஓட்டுரிமையை உறுதி செய்யும் பணி புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில், வாக்காளர் பதிவு அதிகாரி கந்தசாமி தலைமையில் நடந்து வருகிறது. இதில், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் பிரீத்திவி, சிவசங்கரன், இளஞ்செழியன் ஆகியோர் ஆவணங்களை சரிபார்த்து வாக்காளர்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ