உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எம்.ஐ.டி., கல்லுாரியில் தரமான கல்வி நிலை வளர்ச்சி குறியீட்டு தினம் 

 எம்.ஐ.டி., கல்லுாரியில் தரமான கல்வி நிலை வளர்ச்சி குறியீட்டு தினம் 

புதுச்சேரி: புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லுா ரி) மூன்றாவது உள் தரம் உறுதிப்படுத்தல் குழு, ஐ.கியூ.ஏ.சி. தினம் கொண்டாடியது. மணக்குள விநாயகர் கல்விக் குழும தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். ஐ.கியூ.ஏ.சி., ஒருங்கிணைப்பாளர் வள்ளி, ஐ.கியூ.ஏ.சி., நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் தரக் குறியீடுகளுடன் இணைந்த செயல் திட்டங்கள் குறித்து விளக்கினார். அதிகாரப்பூர்வ ஐ.கியூ.ஏ.சி. குறுந்தகடு வெளியிடப்பட்டது. தலைமை விருந்தினராக சென்னை எக்சிம் குழுமம் இயக்குனர் பத்மநாபன் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் இந்திய பொருட்களை மட்டும் வாங்குதல் என்ற உறுதிமொழிகளை எடுத்தனர். தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படைப்புத்திறன்களை 86 அணிகள் கொண்ட போஸ்டர் நிகழ்வுகள் மற்றும் 30 குறும்பட அணிகள் மூலம் வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் சோபியா சிறந்த ஆய்வாளர் விருது பெற்றார். இந்த ஆண்டின் சிறந்த குழு செயல்பாட்டிற்கான விருதை கலாசார குழு பெற்றது. சிறந்த எஸ்.டி..ஜி செயல்பாட்டிற்கான விருது எஸ்.டி..ஜி 1 மற்றும் ஒருங்கிணைப்பாளர் பிரியா பெற்றார். தேசிய ஆணைக்குழு பணிகளில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு வெள்ளி நாணயம் வழங்கி பாராட்டப்பட்டனர். மின் தகவல் தொடர்புத் துறை உதவி பேராசிரியர் சோபியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை