உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டி10 கிரிக்கெட் போட்டி எம்.ஐ.டி., கல்லுாரி வெற்றி

டி10 கிரிக்கெட் போட்டி எம்.ஐ.டி., கல்லுாரி வெற்றி

புதுச்சேரி : புதுச்சேரி, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) மற்றும் புதுச்சேரி மனிதவள வட்டாரம் இடையே நடந்த டி10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் எம்.ஐ.டி., அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. புதுச்சேரி, மதகடிப்பட்டு கலித்தீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லுாரி மைதானத்தில், மனிதவள வட்டாரம் உறுப்பினர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் அணிகள் இடையே டி10 கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற எம்.ஐ.டி., அணி கேப்டன் ராஜேஷ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ.டி., அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தனர்.பின், 77 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மனிதவள வட்டாரம் அணி 10 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் எம்.ஐ.டி., அணி வெற்றி பெற்றது.தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் மலர்க்கண் தலைமை தாங்கினார். மனிதவள வட்டாரம் தலைவர் நிஷா, கல்லுாரி வேலை வாய்ப்பு துறை டீன் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற எம்.ஐ.டி., அணிக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி உடற்பயிற்சி ஆசிரியர் மோகன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை