அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்
பாகூர்: கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை, மோகதன்தாஸ் எம்.எல்.ஏ., வழங்கினார். கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், பள்ளி துணை முதல்வர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் அருள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து, அவர், 'கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் கல்வியின் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். விழாவில், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். விரிவுரையாளர் தனுசு நன்றி கூறினார்.