உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.1000 உதவித் தொகை எம்.எல்.ஏ., கோரிக்கை

மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.1000 உதவித் தொகை எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., பேசியதாவது:குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாயாக இருந்த மகளிர் உதவித் தொகையை, 2,500 ரூபாயாக முதல்வர் உயர்த்தி அறிவித்துள்ளார். சிவப்பு ரேஷன் கார்டுகளுடன் என்னை சந்திக்க வந்த பெண்கள் முதல்வரை பாராட்டுகின்றனர்.வீட்டில் பெண்கள் அனைத்து வேலைகளையும் செய்தாலும் பெயரில்லை. பெண்கள் சும்மா இருக்கின்றனர் என்றே குடும்பத்தினர் கருதுகின்றனர். இந்த உதவி தொகையால் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்களுக்கு கவுரவம் கிடைத்துள்ளது.ஆனால் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்கள், அரசிடம் எந்த உதவியும் பெறமுடியவில்லை. அவர்களுக்கு உதவித் தொகை கிடையாது. சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்களுக்கு உதவித் தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில், மஞ்சள் ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்க வேண்டும். இந்த சட்டசபை கூட்டத் தொடரிலே முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி