உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் ஸ்டேஷன் மீது எம்.எல்.ஏ., திடுக் புகார் 

போலீஸ் ஸ்டேஷன் மீது எம்.எல்.ஏ., திடுக் புகார் 

புதுச்சேரி : சட்டசபை பூஜ்ய நேரத்தில் காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேசியதாவது:பாகூர் தொகுயில் கடந்த 5ம் தேதி ஒரு ஆசிரியரிடம் செயின் பறிப்பு முயற்சி நடந்தது. இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் அலட்சியமாக பாதிக்கப்பட்ட ஆசிரியரை அலைக்கழித்துள்ளனர். திருட்டா நடந்துவிட்டது, அதனால் எதுமே நடக்கவில்லையே பொறுப்பு இல்லாமல் பதில் அளித்துள்ளனர். சம்பவம் நடந்தது உண்மை. அது தொடர்பான சி.சி.டி.வி., காட்சி பதிவுகள் உள்ளன. அப்படி இருக்கும்போது பொறுப்பு இல்லாமல் அலைக்கழித்துள்ளனர். திருட்டு நடந்தா தான் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டுமா. இது தொடர்பாக கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ