உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வடிகால் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வடிகால் வாய்க்கால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பாகூர் : பாகூர் பழைய காமராஜர் நகரில், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் மூலமாக, பாகூர் பழைய காமராஜ் நகருக்கு மேற்கில் அமைந்துள்ள வாய்க்காலில், 42 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில், இருபுறமும் சாய்வு சுவர் அமைத்து, கழிவு நீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் சுப்ரமணியன், இளநிலை பொறியாளர் புனிதவதி மற்றும் தி.மு.க.,வினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை