உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமையலறை கட்டும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சமையலறை கட்டும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

அரியாங்குப்பம் : முருங்கப்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில், 17.73 லட்சம் மதிப்பில், சமையலறை கட்டும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.முருங்கப்பாக்கம், நாட்டார் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் சமையலறை இல்லாமல் இருந்தது. அதனை அடுத்து, தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 17.73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எல்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை