உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் சாலை அமைக்கும் பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பொதுப்பணித்துறை மூலம், உப்பளம் தொகுதி, வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெரு மற்றும் அதனை சார்ந்தப் பகுதிகளுக்கு ரூ.14.35 லட்சம் செலவில் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை துணை செயற்பொறியாளர் யுவராஜ், இளநிலைப் பொறியாளர் சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், பொருளாளர் மணிமாறன், துணை செயலாளர் ராஜ், மீனவரணி துணை செயலாளர் வினாயகமூர்த்தி, மாநில சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் நோயல், கிளை செயலாளர் கோபி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி