உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார்: கோனேரிக்குப்பம் கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலை வடக்கு கோட்டம் சார்பில், ரூ. 25 லட்சம் திட்ட மதிப்பில் கோனேரிக்குப்பம் கிராம வழியாக செல்லும் சன்னியாசிகுப்பம் சாலையை மேம்படுத்தி தார் சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப்பொறியாளர் ஜலில், இளநிலைப் பொறியாளர் தேவர், காங்., பிரமுகர்கள் லோகையன், தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ