உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 58 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ. 58 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில், 58.9 லட்சம் ரூபாயில், சிமென்ட் சாலை அமைக்கும் பணியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முதலியார்பேட்டை தொகுதி, வன்னிய பெருமாள் கோவில் வீதியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 46.27 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை பணியை, சம்பத் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, லட்சுமி நகரில், 11.82 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கந்தசாமி, சிவபாலன், செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப்பொறியாளர் ரமேஷ் உட்பட நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை