உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் குழாய் அமைக்கும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் இந்திரா நகர், 7வது குறுக்கு தெருவில், குடிநீர் வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், குடியிருப்பவர்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். எம்.எல்.ஏ., உரிய முயற்சி எடுத்ததன் பேரில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை