உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு

அரசு பள்ளிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் மழை பாதிப்புகள் குறித்து நேரு எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.கனமழை காரணமாக உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.உருளையன்பேட்டை அரசு பள்ளியில் நேரு எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.மேலும் ராஜா நகர், கோவிந்த சாலைஅரசு ஆரம்பப்பள்ளிகளில் வெள்ள பாதிப்புகள் உள்ளதா,பள்ளிகளில் மேல் தளத்தில் நீர்க்கசிவு உள்ளதாஎன, கேட்டறிந்தார்.ஆய்வின்போது உருளையன்பேட்டை தொகுதி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி