உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம்

சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க வலியுறுத்தி கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமையில் அப்பகுதி மக்கள் இன்று (நவ.,19) காலை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க., செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாசு கலந்த குடிநீரை ஒரு பாட்டிலில் எடுத்து வந்து, மண் பானைகளை நடுரோட்டில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், நெல்லித்தோப்பு தொகுதி முழுதும் விரைவில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அததை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை