உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குடிநீர் குழாயை மாற்ற கோரி பொறியாளரிடம், எம்.எல்.ஏ., மனு 

 குடிநீர் குழாயை மாற்ற கோரி பொறியாளரிடம், எம்.எல்.ஏ., மனு 

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய் மாற்றி அமைக்ககோரி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் வீரசெல்வத்திடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உப்பளம் தொகுதியின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாய்கள் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது இந்த குழாய்கள் சேதமடைந்து, குடிநீர் பழுப்பு நிறத்தில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, உப்பளம் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்துள்ள குடிநீர் குழாய்களை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய குழாய் அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், உப்பளம் தொகுதியில் ஆய்வு செய்து, சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !