உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அண்ணா திடல் அடிக்காசு கடைகளை விரைவில் வழங்க எம்.எல்.ஏ., கோரிக்கை

அண்ணா திடல் அடிக்காசு கடைகளை விரைவில் வழங்க எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: அண்ணா திடல் அடிக்காசு கடைகளை வியாபாரிகளுக்கு விரைந்து வழங்க வேணடும் என, நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தினார். நேரு எம்.எல்.ஏ., நேற்று நடைபாதை வியாபாரிகளுடன் சென்று, புதுச்சேரி நகராட்சி கமிஷனர் கந்தசாமியை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி அண்ணா திடலில், புதிதாக கட்டப்பட்டுள்ள 65 அடிக்காசு கடைகளை விரைவாக வியாபாரிகளுக்கு வழங்கவும், பஸ் நிலையத்தில் வியபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 20 பழக்கடைகள் மற்றும் 10 பூக்கடைகளுக்கு வியாபாரத்திற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி தர வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த கமிஷனர், தீபாவளி முடிந்ததும் அண்ணா திடல் கடைகள் வியாபாரிகளுக்கு வழங்கவும், பஸ் நிலைய பழம் மற்றும் பூக்கடைகளில் வியாபாரம் செய்வதற்கான வசதிகளை விரைவில் செய்து தருவதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து வியாபாரிகள், நேரு எம்.எல்.ஏ.,விற்கும், கமிஷனர் கந்தசாமிக்கு நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை