உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வாய்க்கால் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

அரியாங்குப்பம்: நோணாங்குப்பத்தில், வாய்க்கால் அமைக்கும் பணியை ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மணவெளி தொகுதி, நோணாங்குப்பத்தில் வாய்க்கால் வசதியில்லாமல் இருந்தது. அதையடுத்து, அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், ‘யூ’ மற்றும் ‘எல்’ வடிவ வாய்க்கால் அமைக்க பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டத்தின் மூலம் 39 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான, பணியை ராமு எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உதவிப்பொறியாளர் முகம்மது தம்முல், இளநிலைப் பொறியாளர் கார்த்திக் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை