உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் துறை தலைமை அலுவலகத்தை எம்.எல்.ஏ., பொதுமக்கள் முற்றுகை

மின் துறை தலைமை அலுவலகத்தை எம்.எல்.ஏ., பொதுமக்கள் முற்றுகை

புதுச்சேரி: உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி தொகுதியில் ஏற்பட்டும் வரும் மின்தடையை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., தலைமையில், பொது மக்கள், மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக முன் அறிப்பின்றி தொடர் மின் தடை ஏற்பட்டு வருகிறது. வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்புகள் மிகவும் பழமையாக இருப்பதால், மின் தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. புதுச்சேரியின் மின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறிய மின் துறையை கண்டித்தும், வளர்ந்து வரும் புதுச்சேரிக்கு ஏற்றவாறு மின் கட்டமைப்புகளை மேம்படுத்திட வலியுறுத்தி, நேயம் மக்கள் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ., தலைமையில், மின் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடியில் தொகுதியில், மின் தடை ஏற்படுவதை சுட்டிக்காட்டி, சீரமைக்க தவறிய மின்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது. மின் துறை தலைமை அதிகாரி, நேரு எம்.எல்.ஏ.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்துறையில் உள் கட்டமைப்பு பிரச்னைகள் குறித்து முதல்வர், அமைச்சர், துறை செயலரிடம் பேசி, மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை