உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மழை நிவாரணம் வழங்க கோரி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரிடம் மனு

 மழை நிவாரணம் வழங்க கோரி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரிடம் மனு

புதுச்சேரி: மழை நிவாரணம் கேட்டு காரைக்கால் எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து முதல்வரை சந்தித்து மனு அளித்தனர். வங்க கடலில் ஏற்பட்ட 'டிட்வா' புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தொடர் மழையால் வேலையின்றி அவதிப்பட்டு வரும் காரைக்கால் மாவட்ட மக்களுக்கு மழை நிவாரணமாக ரேஷன் கார்டிற்கு ரூ.10 ஆயிரமும், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த நெடுங்காடு எம்.எல்.ஏ., சந்திரபிரியங்கா, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாக தியாகராஜன், திருநள்ளாறை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ., பி.ஆர்.சிவா ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் தனித்தனியே சந்தித்து மனு அளித்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்களின் மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை