எம்.எல்.ஏ., கிண்டல் பேச்சால் அரசு விழாவில் பரபரப்பு
வில்லியனுார்: வளர்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்ட துவக்க விழாவில் சாய்சரவணன் குமார் எம்.எல்.ஏ.,வில் கிண்டல் பேச்சால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி ஊரக வளரச்சித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், வளர்ச்சியடைந்த பாரதம், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்ட துவக்க விழா, வில்லியனுாரில் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலர் கிருஷ்ண மோகன் உப்பு வரவேற்றார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், சிவகொழுந்து, எம்.எல்.ஏ.,க்கள் சாய்சரவணன் குமார், ரவிக்குமார், மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, திட்டத்தை துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமிக்கு முன், சாய் சரவணன் குமார் எம்.எல்.ஏ., பேசுகையில், தற்காலிக சபாநாயகரே... இலாகா இல்லாத அமைச்சர்களே... என்று கிண்டலாக பேசியதோடு, தமிழக முதல்வர் விஜய் குறித்து புகழ்ந்தும் பேசியதால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.