உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை எம்.எல்.ஏ., முற்றுகையால் பரபரப்பு

 குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை எம்.எல்.ஏ., முற்றுகையால் பரபரப்பு

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரு எம்.எல்.ஏ., புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில், குடிசை மாற்று வாரியம் மூலம் விடுப்பட்டவர்களுக்கு வீடு கட்டும் மானிய உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும். புஸ்ஸி வீதி, சின்ன சுப்பராய பிள்ளை வீதி, பாரதி வீதி, கந்தப்ப முதலியார் வீதிகளில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு லாம்பர்ட் சரவணன் நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். திடீர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கண்டாக்டர் தோட்டம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளை புதுப்பித்து மேம்படுத்த வேண்டும். குடியிருப்புகள் மத்தியில் உள்ள சிமென்ட் சாலைகளை, புதிய சாலைகளாக மாற்றியமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார். அதற்கு, குடிசை மாற்று வாரிய தலைமை அதிகாரி, கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ