மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி : அரசு சட்டக்கல்லுாரியில் இன்று மாதிரி சட்டசபை நிகழ்ச்சி நடக்கிறது.புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, தேர்தல் துறையுடன் இணைந்து மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான மாதிரி சட்டசபை நிகழ்ச்சியை இன்று காலை 11:00 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.புதுச்சேரியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சட்டசபை மாதிரி நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தேர்தல் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் சட்டசபை நடைமுறைகள் குறித்த அறிவைப் பெறவும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த போட்டியாளர்களுக்கு பரிசுகளும் அளிக்கப்பட உள்ளன.மாதிரி சட்டசபை நிகழ்ச்சியையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில் பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் இணைந்து, சட்டசபை நடைமுறைகள், முதல்வர், அமைச்சரவை, சபாநாயகர் தேர்வு, பதவி பிரமாணம், பட்ஜெட் தாக்கல், ஓட்டளிப்பு என சட்டசபையின் அனைத்து நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago