உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாதிரி ராக்கெட் பயிற்சி பட்டறை வாசவி பள்ளி மாணவர்கள் சாதனை

மாதிரி ராக்கெட் பயிற்சி பட்டறை வாசவி பள்ளி மாணவர்கள் சாதனை

புதுச்சேரி: இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் சார்பில், நடந்த மாதிரி ராக்கெட் பயிற்சி பட்டறையில் புதுச்சேரி வாசவி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் 3 நாட்கள் நடந்த மாதிரி ராக்கெட் பயிற்சி பட்டறையில், புதுச்சேரி வாசவி பள்ளியில் இருந்து 40 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பயிற்சியில், ராக்கெட் அறிவியலின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் அதன் பொறியியல் அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், ராக்கெட் நிர்வகிக்கும் உந்துவிசை, இழுவை, காற்றோட்ட விசைகள் மற்றும் இயற்பியல் கருத்துகள் விளக்கி கூறப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்கள் ராக்கெட் மாதிரிகளை வடிவமைத்தனர். மேலும், ராக்கெட் பறப்பதற்கான உயரம் மற்றும் நிலைத்தன்மை விளிம்புகளை ஆய்வு செய்து, ராக்கெட்டு தயாரித்து தங்கள் அனுபவங்களை பெற்றனர். மாணவர்கள் தயாரித்த சி. 64 மாதிரி ராக்கெட்டை, பயிற்றுவிப்பாளர்கள் மூலம் விண்ணில் ஏவப்பட்டு பின், தரையிறங்கப்பட்டது. மாதிரி ராக்கெட் தயாரித்த மாணவர்களை பள்ளி சார்பில் பாராட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி