உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / யோகாவை சர்வதேச அளவில் கொண்டு சென்றவர் மோடி கவனர் கைலாஸ்நாதன் பெருமிதம்

யோகாவை சர்வதேச அளவில் கொண்டு சென்றவர் மோடி கவனர் கைலாஸ்நாதன் பெருமிதம்

புதுச்சேரி : உலக அரங்கில் யோகானை கொண்டு சென்றதில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என, கர்வனர் கைலாஸ்நாதன் பேசினார்.புதுச்சேரியில் சர்வதேச யோகா விழா நடக்க 25 நாட்கள் உள்ளது. இதற்கான கவுண்டவுன் நிகழ்ச்சி நேற்று கடற்கரை சாலையில் நடந்தது. நிகழ்ச்சியை மத்திய சுகாதார ஆயுஷ் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பிரதாப்ராஜ் ஜாதவ் யோகா விழிப்புணர் துவக்கி வைத்து பேசியதாவது;வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் நடக்கிறது. இதற்கான 25 நாள் கவுண்டவுன் நிகழ்ச்சி புதுச்சேரியில் துவங்கியுள்ளது. இந்தியாவின் மிக தொன்மையான அறிவியல் உடல், மனம், ஆன்மா என 3ம் ஒன்றுபடுவதை குறிக்கிறது. மன உறுதியையும், உடல் நலத்தையும் இணைக்கும் ஒரு வாழ்கை முறை யோகா.பல ஆண்டுகளாக நமது முன்னோர் அதை பாதுகாத்து நமக்கு தந்துள்ளனர். யோகாவை உலக அளவிற்கு கொண்டு சென்றதில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய பங்குள்ளது. அவர் எடுத்த முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்காக நாம் அனைவரும் பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும்.பல நாடுகளில் யோகாவை கல்வி பாடதிட்டத்தில் சேர்த்துள்ளனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பாதுகாப்பு துறையில் யோகா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொறு வரும் யோகா மூலம் உடலையும், மனதையும் மேம்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர், பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை