உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு மோகினி அலங்காரம்

 ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு மோகினி அலங்காரம்

புதுச்சேரி: புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி நேற்று மோகனி அலங்காரத்தில் அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை பெருமாள் ஸ்ரீனிவாச மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று 30ம் தேதி அதிகாலை ஸ்ரீராமர் சன்னதியில் விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, தனுர் மாத பூஜை, சாற்றுமுறை நடக்கிறது. தொடர்ந்து, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சன்னதியில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, 1ம் தேதி விடியற்காலை 5 மணி முதல் சிறப்பு தரிசனம் நடக்கிறது. இரவு 7 மணி வரை ஸ்ரீராம பாதுகைக்கு சிறப்பு சகஸ்ரநாம அஷ்டோத்ர அர்ச்னை மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை